சை ரா நரசிம்ம ரெட்டி

122
Sye Raa Narasimha Reddy

Sye Raa Narasimha Reddy Audience Ratings: நடிகர்கள் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா மற்றும் தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ’சை ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார்.

ராயலசீமாவின் சுதந்திரப் போராட்ட வீரரான ’யுயலவாடா நரசிம்ம ரெட்டியாக’, ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார் சிரஞ்சீவி. ஆங்கிலேயருக்கு எதிரான நரசிம்மாவின் போரை அடிப்படையாகக் கொண்டு இப்படம் இயக்கப்பட்டிருக்கிறது.
ஆங்கிலேயருக்கு எதிரான இந்தப் போர் 1857-ல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

ரசிகர்களை டென்சன் செய்த ஸ்ரத்தா கபூர்

சமீபத்தில் ’சை ரா நரசிம்ம ரெட்டி’யின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, எஸ்.எஸ்.ராஜமெளலியும், அவரது பாகுபலியும் தான் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்துக்கு ஊக்கமளிக்கும் காரணியாக விளங்கியதாகக் குறிப்பிட்டார்.

“ராஜமெளலியின் பாகுபலி இல்லையென்றால், சை ரா ஒருபோதும் நடந்திருக்காது. எங்களுக்கு தேவையான நம்பிக்கையை அவர் தான் அளித்தார்” என்றார்.

தனது மகனும், ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் தயாரிப்பாளருமான ராம் சரணின் அர்ப்பணிப்பு குறித்துப் பேசிய சிரஞ்சீவி, “சரண் இந்தப் படத்தை தயாரிப்பதற்காக பணம் செலவழிக்க தயங்கவில்லை.

நாங்கள் கேட்ட எல்லாவற்றையும் அவர் உடனே ஏற்பாடு செய்தார். போர் காட்சியை படமாக்க ஜார்ஜியா சரியான இடமாக இருக்கும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.

‘தளபதி 64’ லோகேஷனை தெரிவு செய்த லோகேஷ்

இரண்டாவது முறை யோசிப்பதற்கு இடம் கொடுக்காமல், எங்களை ஜார்ஜியாவுக்கு பறக்க வைத்தார். நாங்கள் அங்கு ஒன்றரை மாதங்கள் படபிடிப்பு நடத்தினோம்.

அதற்கு சரண் சுமார் ரூ .75 கோடி செலவு செய்திருக்கிறார். அவர் தயாரிக்க விரும்பியதெல்லாம் ஒரு நல்ல படம் தான் என்பதால், செலவுகளைப் பற்றி கவலைப்படவில்லை” என்றார்.

வெளியானது ஆதித்யா வர்மா புதிய டீசர்.!

இதற்கிடையே ’சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தைப் பார்த்த ரசிகர்கள், ஒரு சுதந்திர போராட்ட வீரரின் கதை எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருக்கிரதென்றும், சிரஞ்சீவி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும், இரண்டாம் பாதியின் கடைசி 20 நிமிடங்கள் மிக நன்றாக இருப்பதாகவும் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.