ஜெய்யுடன் இணைந்த வாணி போஜன்!

55

தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.

தெய்வமகள் சீரியல் முடிந்த பிறகு விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் தெலுங்கில் இவர் நடித்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தமிழிலும் அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் இவர் அறிமுகமானதுடன், வைபவுடன் இவர் நடித்துள்ள லாக்கப் திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.

இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ் வெப் சீரிஸ் ஒன்றில் வாணி போஜன் நாயகியாக நடித்துள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

சாருகேஷ் சேகர் இயக்கியுள்ள இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் நடித்துள்ளார்.

போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நிறைவடைந்தவுடன் விரைவில் இந்த தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.