பெண் சிரித்தால் போச்சு… இரண்டு மூன்று திருமணம் செய்த நடிகர் நடிகைகள்..

61

தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர் நடிகைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்துகொண்டு அதிர்ச்சிக்கு பலரையும் உள்ளாகியுள்ளனர்.

சினிமா உலகில் இது சாதாரணமான விஷயம் என்றாலும் மக்களிடையே இது வெறுப்புக்கு உள்ளான விசயமாகவே உள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்த பிரபலங்களை இங்கு பார்க்கலாம் வாங்க.

ஸ்ரீதேவி

சினிமாவின் ஆரம்ப காலங்களில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என செய்தி வந்தது. ஆனால் அதன் பிறகு அவர்கள் பிரிந்து பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார்.

ராதிகா

நடிகை ராதிகா இதுவரை மூன்று திருமணங்கள் செய்துள்ளார். முதலில் நடிகர் பிரதாப் போத்தன் என்பவரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்துப் பெற்றார், பினனர் லண்டனில் ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இறுதியாக சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

லட்சுமி

நடிகை லட்சுமி முதன்முதலில் பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு மோகன் சர்மா என்பவரை திருமணம் செய்து பார்த்தார். இறுதியாக நடிகர் சிவசந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

கமலஹாசன்

கமலஹாசன் தனது சிறு வயதில் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிகை சரிகாவுடன் லிவிங் டுகெதர் வாழ்ந்து குழந்தை பிறந்த பிறகு அவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் விவாகரத்து செய்துவிட்டு கௌதமியுடன் வாழ்ந்து வந்தார்.

கார்த்திக்

நடிகை ராகினி என்பவரை கார்த்திக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ராகினியின் தங்கை ரதியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டார்.

எம்ஜிஆர்

எம்ஜிஆருக்கு தங்கம்மாள், சதானந்தவதி, நடிகை ஜானகி என மூன்று மனைவிகள் இருந்தனர்.

பிரகாஷ் ராஜ்

முதலில் நடிகை டிஸ்கோ சாந்தியின் அக்கா லலிதா குமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார். சமீபத்தில் போனி வர்மா என்பவரை திருமணம் செய்தார்.

சரத்குமார்

சரத்குமார் இளம் வயதில் சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.