ஆலியாவை தேர்ந்தேடுத்தது ஏன்…? ராஜமௌலி விளக்கம்

57

பாகுபலி வெற்றியை அடுத்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் RRR.

ராம்சரண் மற்றும் Jr.NTR இருவரும் கதாநாயகர்களாக நடித்து வரும் இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஹிந்தியில் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன், ஆல்யா பட், சமுத்திரக்கனி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ஆலியா பட்டை தேர்ந்தெடுத்தது ஏன் என்பது குறித்து ராஜமௌலியின் பதிவு ஒன்றை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

இரண்டு பெரிய நடிகர்களுக்கு இடையே போட்டி போடும் நடிகை ஒருவர் தேவைப்பட்டார் என்றும் இது முக்கோண காதல் கதை இல்லை என்பதையும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த கதாபாத்திரம் மிகவும் அப்பாவியானதாகவும், ஆபத்தானதாகவும் இருக்கும் என்றும் அதற்கு பொருத்தமானவர் ஆலியா பட் என்றும் ராஜமௌலி கூறியுள்ளார்.