ஹிப்ஹாப் தமிழாவின் நான் சிரித்தால் படத்தின் முக்கிய காட்சி வெளியானது

70
Naan Sirithal Movie ,Climax Scene , Naan Sirithal Movie Pre Climax Scene , ஹிப்ஹாப் தமிழா,நான் சிரித்தால்

இசையமைப்பாளராக இருந்து தனது கடும் முயற்சியால் தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக ஹிப்ஹாப் தமிழா ஆதி இன்று மாறியிருக்கின்றார்.

இவர் நடித்த மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தொடர்ந்து இவர் அறிமுக இயக்குநர் ராணா இயக்கத்தில் நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாக நடிக்க சுந்தர் சி இந்த படத்தை தயாரித்திருந்தார்.

இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு முந்தைய காட்சியை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.