Mr. லோக்கல் விமர்சனம்

201
Mr Local Reviews | MR. LOCAL MOVIE REVIEW | Sivakarthikeyan | Nayanthara | M. Rajesh | Radikaa Sarathkumar | Kollywood Live

Mr Local Reviews : லோக்கலான மனோகரனின் (சிவகார்த்திகேயன்) அம்மா ராதிகா ஒரு சீரியல் நடிகையுடன் போட்டோ எடுக்க ஆசைப்படுகிறார். தனியார் கார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் சிவகார்த்திகேயன் தன்னுடைய அம்மாவை அழைத்து கொண்டு காரில் செல்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக நயன்தாரா சிவாவின் கார் மீது தன்னுடைய காரை மோதி விடுகிறார். அதன் பின்னர் இந்த மோதல் எப்படி காதலாகிறது? இந்த காதல் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பது தான் மீதி கதை.

சிவகார்த்திகேயன், நயன்தாராவின் நடிப்பு வழக்கம் போல இந்த படத்திலும் சிறப்பாகவே அமைந்துள்ளது. சதிஷ், யோகி பாபு, ரோபோ ஷங்கர் என பலர் இருந்தும் காமெடி சொல்லி கொள்ளும் அளவு இல்லை. நம்மை ஓரளவிற்கு சிரிக்க வைக்கும் அளவிற்கு தான் காமெடி கை கொடுத்துள்ளது.

ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல அமைந்துள்ளது. பாடல்களும் ரசிக்கும் அளவில் அமைந்துள்ளது. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் விவேக் ஹர்ஷனின் எடிட்டிங்கும் பிரமாதம்.

எம் ராஜேஷ் படம் என்றாலே காமெடிக்கு கேரண்டி என நம்பலாம். இதுவரை அப்படி தான் இருந்து வந்தது. ஆனால் Mr. லோக்கல் திரைப்படத்தில் அதை கொஞ்சம் கோட்டை விட்டுள்ளார். காதல், மோதல், நடிகர் நடிகைகளிடம் வேலை வாங்கிய விதம் ஆகியவை சிறப்பு.

விஜய்-சிவகார்த்திகேயன் படங்களுக்கு ஒரே டைட்டில்!

கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யவுள்ள நடிகை காயத்ரி? அதிர்ச்சி தகவல்

சூப்பர் ஸ்டாரை நெருங்கிய யோகிபாபு