மான்ஸ்டர் விமர்சனம்

176
Monster Tamil Movie Review | Nelson Venkatesan | S. J. Suryah| Priya Bhavani Sankar | Karunakaran| Movie Review | Kollywood Live

Monster Tamil Movie Review : எஸ்.ஜே.சூர்யா, கருணாகரனும் சென்னையில் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது வீட்டில் பெண் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தனது சொந்த ஊரில் இருக்கும் பிரியா பவானி சங்கரை பெண் பார்க்க செல்கின்றனர்.

ஆனால் பெண்ணை பார்க்க முடியவில்லை. ஒருகட்டத்தில் சொந்த வீடு இருந்தால் தான் பெண் தருவார்களோ என்று நினைத்து வீடு ஒன்றை வாங்க முடிவு செய்கிறார்.

அடுத்த வித்தியாபாலன் இவர்தான் – ப்ரியா பவானியை புகழ்ந்த சூர்யா

பின்னர் அந்த வீட்டில் தங்கும் அவருக்கு எலி ஒன்று பெரும் தொல்லை கொடுக்கிறது. வீட்டில் எது வாங்கி வைத்தாலும் அதனை கடித்து துண்டு துண்டாக்கி தொல்லை கொடுக்கிறது. அதை எங்கேயாவது கொண்டு சென்று விட்டுவிட எண்ணுகிறார்.

இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யாவுக்கும், பிரியா பவானி சங்கருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த நிலையில், பிரியா ஆசைப்பட்டு கேட்கும் ஷோபா ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்குகிறார். அந்த ஷோபாவையும் எலி கடித்து நாசம் செய்ய, கடுப்பாகும் எஸ்.ஜே.சூர்யா அதை கொன்று விட முடிவு செய்கிறார்.

விஷால்-அனிஷா திருமண தேதி வெளியானது – திருமணம் நடிகர் சங்க கட்டிடத்தில்!

கடைசியில், எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற எண்ணத்துடன் வளர்ந்த எஸ்.ஜே.சூர்யா அந்த எலியை கொன்றாரா? என்பதே மான்ஸ்ட்ரான எலியின் மீதிக்கதை.

எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் தனது வழக்கமான நடிப்பு இல்லாமல் ஒரு சாதாரண இளைஞராக சிறப்பாக நடித்திருக்கிறார். எலியால் படும் தொல்லைகள், எலிலை கொல்ல முடியாமல் தவிக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு அபாரம்.

சம்பளம் பற்றி கவலைப்படாத நடிகை

பிரியா பவானி சங்கர் படம் முழுக்க அழகான குடும்ப பெண்ணாக வந்து கவர்கிறார். கருணாகரன் காமெடி கதாபாத்திரமாக இல்லாமல், குணச்சித்திர வேடத்தில் வருகிறது. பெரிதாக காமெடி செய்யவில்லை.

பெரும்பாலான இடங்களில் எலியை கிராபிக்ஸ் மூலம் காட்டி இருக்கிறார்கள். எலியே பாதி படத்தை ஆக்கிரமித்திருக்கிறது.

‘மான்ஸ்டர்’ சென்சார் தகவல்

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. கோகுல் பினேயின் ஒளிப்பதிவில் காட்சிகளும் அபாரம்.

மொத்தத்தில் `மான்ஸ்டர்’ சுவாரஸ்யம் குறைவு.