வனிதாவுக்கு மூன்றாவது முறையாக திருமணம்

9

விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்த வனிதா விஜயகுமார் மூன்றாவது முறையாக தனக்கு திருமணம் நடக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதா இதுவரை 2 திருமணங்கள் மற்றும் ஒரு காதல் உறவில் இருந்த நிலையில், அந்த உறவுகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.

2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்ற நடிகரை தனது 19 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். 2007 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை அதே ஆண்டிலேயே இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவருடன் ஜெயந்திகா என்ற மகளை பெற்றுக்கொண்டார். அடுத்த மூன்று ஆண்டுகளில் 2010ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் வனிதா.

பின்னர் நடன இயக்குநரான ராபர்ட்டை காதலித்தார். அவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருந்தனர். பின்னர் கருத்து வேறுபாட்டால் வனிதா. அவரையும் பிரிந்தார்

இந்த நிலையில் வனிதாவுக்கு கல்யாணம் என ஒரு திருமண பத்திரிகை வைரலானது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த வனிதா விஜயகுமார், தான் மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளது உண்மைதான் என கூறியுள்ளார்.

வரும் 27ஆம் தேதி வீட்டிலேயே நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருமணம் நடைபெறவுள்ளது.