வயலில் நாத்து நட்ட பிரபல நடிகை

36
Keerthi Pandian Learning Agriculture In Lockdown

தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக இருந்த அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தும்பா படத்தில் அறிமுகமான கீர்த்தி பாண்டியன், தற்போது ஹெலன் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.

படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் தங்களின் பொழுதுபோக்கு வீடியோக்கள் மற்றும் விழிப்புணர்வு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

திருநெல்வேலியில் குடும்பத்துடன் இருக்கும் கீர்த்தி பாண்டியன், விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது வயலில் நாத்து நடும் வீடியோவை பதிவிட்டுள்ள அவர், என் வாழ்வில் மிகவும் சிறப்பான ஒரு செயலை செய்திருக்கிறேன். இந்த கலையை கற்றுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது செயலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.