கொரோனாவை எதிர்த்து பேராடும் ஜேம்ஸ்பாண்ட்

33

ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் நடிப்பவர்கள் தான் உலகம் முழுக்க ரசிகர்களை சம்பாதித்து உலகின் நம்பர் ஒன் நடிகராக இருந்தார்கள்.

ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் ‘நோ டைம் டூ டை’ 25ஆவது படமாக டேனியல் கிரேய்க் நடிப்பில் தயாராகி வருகிறது.

கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் ஆகிய படங்களில் டேனியல் கிரேய்க் முன்னதாக நடித்துள்ளார்.

ஜேம்ஸ்பாண்டாக டேனியல் க்ரேய்க்கின் கடைசி படம் என்பதால் ‘நோ டைம் டூ டை’ படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

இந்த நிலையில், கடைசி நேரத்தில் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி கதையில்கூட மாற்றம் செய்துள்ளார்களாம்.

இந்த படத்தில் ஜேம்ஸ் பாண்ட் கண்ணுக்கு தெரியாத வைரசை பரப்பும் வில்லன்களிடமிருந்து உலகத்தை காப்பாற்ற இருக்கிறார்.

கொரோனா என்ற பெயரை பயன்படுத்தாத போதும், இது கொரோனாவை எதிர்த்து ஜேம்ஸ்பாண்ட் போராடும் கதை என்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஜேம்ஸ்பாண்டுக்கு திருமணமாகி 5 வயதில் குழுந்தை இருப்பதாகவும் அந்த குழந்தைக்கு நோய் தொற்று
ஏற்படுவதிலிருந்தான் கதையே தொடங்குவதாக கதையில் மாற்றம் செய்திருக்கிறார்களாம்.