ட்விட்டரில் நான் இல்லை… விளக்கமளித்த செந்தில்

11

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான செந்தில் கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், செந்தில் ட்விட்டரில் இணைத்துள்ளார் என்று ஒரு ட்விட்டர் பதிவு சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.

இது ஒரு போலி கணக்கு என்று செந்தில் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. தற்போது இது குறித்து செந்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

எந்த சமூகவலைத்தள பக்கத்திலும் தான் இல்லை என்றும் இவ்வாறான விடயங்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்ட செந்தில் கொரோனா காரணமாக அனைவரும் கவனமாக இருக்கவேண்டும் என்றும் கூறினார்.