தோனி படத்தின் கதாநாயகன் தற்கொலை

33

தோனி படத்தின் கதாநாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை மும்பை பாந்த்ரா பகுதியில் இருக்கும் 34 வயதுடைய அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வருகிறது.

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் புகழ் பெற்றவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

இந்த சம்பவம் இந்திய ரசிகர்களுக்கு பெரும் மன வேதனையை அளித்துள்ளது.