ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 3 பற்றிய தகவல்

288
Bigg Boss Tamil Season 3 | Tamil cinema | Bigg Boss Tamil | Bigg Boss | Kollywood Live | Latest news | Vijay Tv
Bigg Boss Tamil Season 3

Bigg Boss Tamil Season 3 : ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 3 -ன் புரமோ வெளியாகியுள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்த நிகழ்ச்சியை முதன்முறையாக தமிழில் அறிமுகப்படுத்தியது பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி.

100 நாட்கள் ஒரே வீட்டில் 14 போட்டியாளர்கள். அவர்களுக்குள் நடக்கும் சண்டை, வாக்குவாதம், நட்பு, போட்டி, பொறாமை இவை அனைத்தும் மக்களாகிய நாம் ஆவலுடன் கண்டு ரசிப்போம்.

எதிர்பாராத விதமாக அந்த சீசன் டாப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது. அதற்கு காரணம், ஜூலி, ஓவியா, காயத்ரி ரகுராம் போன்றோர். அந்த சீசன் மூலம் சினிமாவில் வெறும் நடிகையாக மட்டுமே இருந்த ஓவியா தமிழ் குடும்பங்களின் சொந்த பெண்ணாகவே மாறினார்.

அதனைத் தொடர்ந்து கடந்த வருடம், இரண்டாவது சீசனும் தொடங்கியது, ஆனால் முதல் சீசனை போல் அதற்கு அவ்வளவு எதிர்பார்ப்பு கிடைக்கவில்லை. இருந்த போதும் பிக் பாஸ் ரசிகர்கள் தவறாமல் நிகழ்ச்சியை ஃபலோ செய்தார்கள்.

இந்நிலையில், இந்த வருடத்திற்கான பிக் பாஸ் சீசன் 3 புரொமோ ஷூட் கடந்த வாரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3-ன் புரொமோவை விஜய் தொலைக்காட்சி நேற்றைய தினம் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.

‘தளபதி 63′ படத்தில் முகத்தில் காயங்களுடன் நடிகைகள்!

ஹேப்பி பர்த்டே விஜய் தேவரகொண்டா