வீடு திரும்பினார் ஷாஸா

4

வீடு திரும்பினார் ஷாஸா

பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி. இவரது மூத்த மகள் ஸோவா, இரண்டாவது மகள் ஷாஸா. இருவருமே நடிகைகள். இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கரீம் மொரானியின் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் தயாரிப்பாளர் கரீம் மொரானிக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. மூவருமே தனித்தனி மருத்துவமனைகளில் கண்காணிப்பில் இருந்தனர்.

அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் கரீம் மொரானிக்கும், இளைய மகள் ஷாஸாவுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவர்கள் டிஸ்ஜார்ஜ் ஆகி வீடுகளுக்கு சென்று விட்டனர். இதனை மூத்த மகள் ஸோவா தனது இன்ஸ்ட்ராகிராமில் தெரிவித்துள்ளார். அதோடு, விரைவில் நானும் மீண்டு வருவேன். மற்றவர்களுக்கு உதவி செய்வேன் என கூறியுள்ளார்.