முன்னணி நடிகருடன் ஜோடிசேரும் சினேகா!

369

‘மாரி 2’வுக்கு பிறகு தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. தற்போது, தனுஷ் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து ‘கொடி’ இயக்குநர் துரை செந்தில் குமாருடன் மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளார் தனுஷ். இதிலும் ‘கொடி’ போலவே தனுஷுக்கு இரட்டை வேடமாம்.

என்ன அதில் அண்ணன், தம்பி வேடங்கள், இதில் அப்பா, மகன் வேடங்கள். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் அப்பா தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்கவுள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது.
ஏற்கெனவே, தனுஷின் ‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.