மாணவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய விடுதிக் காப்பாளர் கைது

109
விடுதிக் காப்பாளர்

மலேசியாவில் மாணவர்கள் தங்கும் விடுதியில் இரு மாணவர்களைப் பாலியல் வன்புணர்வு செய்ததுடன் மேலும் மூவரை மானபங்கப்படுத்திய விடுதிக் காப்பாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பெர்லிஸில் உள்ள சமயப் பள்ளியில் பயிலும் மாணவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதை 28 வயது நபர் ஒப்புக்கொண்டார்.

துன்புறுத்தப்பட்ட மாணவர்கள் 9 வயதிலிருந்து 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

பள்ளியில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் புகார் செய்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் பேராக் மாநிலத்திற்குத் தப்பிச் சென்ற நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், அடுத்த வெள்ளிக்கிழமை வரை அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.