பிரியங்கா சோப்ராவின் பெரிய மனசு… அப்படி என்ன செஞ்சுருக்கார் தெரியுமா?

3

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பாடகரை திருமணம் செய்து கொண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார்.

அமெரிக்காவில் கொரோனா தீவிரமடைந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகிறார்கள். அங்கு தொடார்ந்து ஊரடங்கு அமுலில் இருப்பதால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.

இதனால் மாணவ மாணவிகள் கல்வி கற்க முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

பள்ளிக்கு சென்று படிக்க முடியாத குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே ஆன் லைனின் பாடம் படிக்க பிரியங்கா சேர்பரா உதவி செய்து வருகிறார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

இந்த மோசமான சூழலில் மக்கள் அனைவரும் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து தங்களால் முடிந்த உதவியைச் செய்வது மிக மிக முக்கியம். இளைஞர்கள் முன்னேற்றம், கல்வியில் வெற்றி பெறுவது ஆகிய இரண்டு காரணிகளும் எப்போதும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை.

ஜேபிஎல் நிறுவனத்தில் உள்ள என்னுடைய சகாக்களின் உதவியோடு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்காக ஹெட்போன்கள் வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளேன். இந்த சூழலை நாம் அனைவரும் சேர்ந்தே கடக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.