பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகரின் மகன் கைது!

77

கல்லூரி மாணவி ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த பிரபல நடிகரின் மகனை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வசந்தகாலம், தூரல் நின்னு போச்சு உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் சூரிய பிரகாஷ்.

இவர் அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்து வருகிறார். இவருடைய மகன் விஜய் ஹரிஷ். 25 வயதாகும் இவர் தற்போது ‘நாங்களும் நல்லவங்கதான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிகாம் 2 ஆம் ஆண்டு படித்து வந்த சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மாணவி ஒருவருடன் பழகி வந்துள்ளார்.
மாணவியிடம் நம்பிக்கை வார்த்தை கூறி தன்னுடைய விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு மாணவியை அழைத்து வந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து மீண்டும் மீண்டும் அந்த பெண்ணிடம் காட்டி, கூப்பிடும்போதெல்லாம் வீட்டிற்கு வரவேண்டும் என மிரட்டல் விடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

மேலும் வரவில்லை என்றால் சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியும் வந்துள்ளதால் பலமுறை அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் ஒரு கட்டத்தில் தாங்க முடியாத மாணவி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில் நடிகர் விஜய் ஹரிஷை 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.