நடிகை ஸ்ரீதேவி வீட்டுக்கு சென்ற அஜித்!

78

ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார்.

அங்கு ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த அவர் அங்குள்ள குளியலறைக்குச் சென்றார்.

அப்போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.அவரது மறைவு இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் திதி கொடுக்கும் நிகழ்வு சென்னை சிஐடி காலனியில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு அங்கிருந்து கிளம்பிய அஜித்தை போனி கபூர் வாசல் வரை வந்து வழியனுப்பியுள்ளார்.

இதற்கான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.