திருமண நாளில் வெளியான ‘டெடி’ டீசர்… என்ன பொம்மையெல்லாம் பேசுதே!

30

ஆர்யா – சாயிஷாவின் முதலாம் ஆண்டு திருமண நாளில் இருவரும் இணைந்து நடித்த ‘டெடி’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

காதலர்களாக வலம் வந்த ஆர்யாவும் – சாயிஷாவும் கடந்த ஆண்டு இதே தினத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் இன்று முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் நிலையில், அவர்கள் நடித்த ‘டெடி’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தை நாணயம், மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை சக்தி சவுந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.

ஆர்யா, சாயிஷாவுடன், கருணாகரன், சதீஷ், மகிழ் திருமேனி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் இன்று டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டும் ஆர்யாவுடன், மனிதர்களைப் போல் பேசும் டெடி பொம்மை ஒன்றும் இணைந்து நடித்துள்ளது.