டபுள் மீனிங்கா.. எப்போ பேசுனேன் சாரா பேட்டி

59
டபுள் மீனிங்கா

வளர்ந்து வரும் காமெடி நடிகர் சாரா தற்சமயம் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக மாறி வருகிறார்.

இவர் சமீபத்தில் நடித்த ஓ மை கடவுளே படம் மக்களிடத்தில் நல்ல பாராட்டை பெற்றது.

அதே நேரத்தில் இவரின் கதாபாத்திரமும் மக்களால் வெகுவாக பாராட்டபட்டது .

சாரா மற்றும் விஜய் வரதராஜ் தான் டெம்பில் மங்கீஸ் எனும் யூடியூப் சேனலை துவங்கி பல வருடங்களாக அதனை வெற்றிகரமாக நடத்தி தற்போது சினிமாவில் கால் பதித்து உள்ளனர்.

சாரா கடந்த இரு வருடமாக படங்களில் பிஸியாக இருக்கும் நிலையில் விஜய் வரதராஜ் இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு தற்போது தனது படத்தை வெளியிட தயாராக உள்ளார்.

சாரா ,விஜய் மற்றும் டெம்பில் மங்கீஸ் குழு பல நாட்கள் வீட்டில் திட்டு வாங்கி வழிபோக்கர்களை போல ரோட்டில் சுற்றி இருக்கிறார்களாம் .

அப்போதிலிருந்தே படம் எடுத்தால் நண்பர்கள் குழுவுடன் தான் படம் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தையும் உறுதிமொழியையும் அப்போதே எடுத்து விட்டார்களாம் அதை தற்போது விஜய் வரதராஜ் நிறைவேற்றயிருக்கிறார்.

இந்த படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து டெம்பில் மங்கீஸ் ரசிகர்கள் அனைவரும் படத்தை பற்றியே பேசி வருகிறார்கள்.

இதனிடையே மற்ற ரசிகர்களுக்கு படம் பிடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கு ஒரு பேட்டியில் பதிலளித்த சாரா இந்த படமே எங்கள் ரசிகர்களை தவிர்த்து மற்ற ரசிகர்களுக்காக தான் அவர்களுக்கு படம் பிடித்து விட்டால் நாங்கள் ஜெயித்து விட்டோம் என்று அர்த்தம் என்று கூறினார் .

சாரா பல யூடியூப் வீடியோக்களில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பேசி நடிப்பார்.

ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு பலரும் இப்படியும் சாரா வித்தியாசமாக நடிப்பாரா என்பதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை டபுள் மீனிங் பேசமால் நடித்ததற்கு பாராட்டுகள் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள சாரா நான் எப்போ டபுள் மீனிங் பேசுனேன் நான் நேராதான பேசிகிட்டு இருக்கேன் என்று நகைச்சுவையாக பதிலளித்து உள்ளார்.