ஜிவி. பிரகாஷின் ‘ஜெயில்’ படத்தில் தனுஷ்

8

ஜிவி. பிரகாஷின் ‘ஜெயில்’ படத்தில் தனுஷ்

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார், அபர்நதி, நந்தன்ராம், பசங்க பாண்டி, ராதிகா, ரவிமரியா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ஜெயில்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசை, நடிப்பில் இணையும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தின் பாடல்களை சோனி நிறுவனம் வெளியிடுகிறது. படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தனுஷ், அதீதி ராவ் காத்தோடு காத்தானேன் என்ற பாடலை பாடியுள்ளார்கள். கபிலன் இப்பாடலை எழுதியுள்ளார்.

இந்த பாடலை ஜூன் 15-ம் தேதி மாலை 6 மணிக்கு தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.

ஜெயில் படத்தை கிரிகேஷ் சினி கீரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார்.