சுஷாந்த் சிங் தற்கொலை; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

30

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து சில தகவல் வெளியாகியுள்ளது.

முதல் கட்ட தகவலின்படி, சுஷாந்த் சிங் கடந்த 6 மாதங்களாக மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அவர் உட்கொண்ட மருந்து குறித்த சீட்டுகள் அவரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் இவரது மேலாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவந்தனர். தற்போது சுஷாந்த்தும் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏறப்டுத்தியுள்ளது.