சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளார்! தாய்மாமா குற்றச்சாட்டு

25
சுஷாந்த் கொலை

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் கடந்த ஒரு மாதமாகவே மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் சுஷாந்தின் வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவரது தாய் வழி மாமா, சுஷாந்த் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பேயில்லை என்று தெரிவித்தார்.

அத்துடன், அவரது சாவின் பின்னணியில் ஏதோ சதி உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.