சங்கத்தலைவன் – கம்யூனிஸம் பேசும் சமுத்திரகனி

120

வெற்றி மாறன் தயாரிக்கும் படம் சங்கத்தலைவன். இந்த படத்தில் சமுத்திரகனி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யா ஆகியோர் நடிக்கின்றனர்.

சமுத்திரகனி தொழிலாளர்களின் நலனுக்காக போராடும் சங்கத் தலைவனாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அச்சம் தவிர் என சமுத்திரக்கனி பேசும் வார்த்தைகளோடு துவங்குகிறது இந்த டிரெய்லர்.

இந்த டிரெய்லர் முழுக்க சமுத்திரக்கனி சிவப்பு சட்டையோடு, தொழிலாளர்களுக்காக போராடும் காட்சிகள் காட்டப்படுகின்றன.

சமுத்திரக்கனி நடித்திருக்கும் இந்த படத்தை எழுதி, இயக்குபவர் மணிமாறன். இவர் அசுரன் படத்தின் திரைக்கதையை வெற்றிமாறனுடன் சேர்ந்து எழுதியவர்.

உதயம் என்ஹெச் 4, பொறியாளன், புகழ் உள்ளிட்ட படங்களிலும் திரைக்கதையாசிரியராக பணிபுரிந்துள்ளார். வெற்றிமாறனின் பல படங்களுக்கும் துணை இயக்குநராக பணியாற்றியவர் இவர்.

சமுத்திரகனி, ரம்யா தவிர்த்து இந்த படத்தில் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீநிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவில், இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார் ராபர்ட் சற்குணம்