சக நடிகைகளுடன் பேசியதால் மனைவியுடன் விவாகரத்தில் முடிந்தது

258
விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் தனது நீண்ட வருட தோழியான ரஜினியை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டதாக விஷ்ணு தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் விவாகரத்தின் பின்னணி குறித்து விஷ்ணு விஷால் மனம் திறந்து பேசியுள்ளார்.

படப்பிடிப்பில் காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக தன்னுடன் நடித்த நடிகைகளுடன் நன்றாக பேசியது தனது மனைவிக்கு பிடிக்கவில்லை என்றும் இதுவே தங்களை விவாகரத்துக்கு இட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், தனது மனைவி தற்போதும் தனக்கு நல்ல தோழியாகவே உள்ளதாக தெரிவித்துள்ள விஷ்ணு – ரஜினி தம்பதிக்கு ஆர்யன் என்கிற மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.