கொள்ளையடிக்கும் விக்ரம் பிரபு… அசுரகுரு ஸ்னீக் பீக் வெளியானது !

46
அசுரகுரு ஸ்னீக் பீக்

அசுரகுரு ஸ்னீக் பீக் வெளியானது !

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓடிய திரைப்படம் வானம் கொட்டட்டும்.

இப்படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் அசுரகுரு என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜ்தீப் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.

இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மஹிமா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ஜகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்து, பின்னணி வேலைகளும் நடந்து முடிந்தது. கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார்.

இப்படத்தை மார்ச் 13-ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தற்போது படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது. வங்கியில் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சிக்கிறார் விக்ரம் பிரபு.