கொரோனாவால் உயிரிழந்த மற்றுமொரு நகைச்சுவை நடிகர்

10
கொரோனாவால்

ஹாலிவுட் நடிகர்களை கொரோனா, தொடர்ந்து தாக்கி வருகிறது. இதுவரை 4 நடிகர்களும், 3 நடிகையும் பலியாகி உள்ளனர்.

இவர்கள் அனைவரும் 60 வயது முதல் 90 வயதை கடந்தவர்கள். ஹாலிவுட்டை தொடர்ந்து இங்கிலாந்து நடிகர்களையும் கொரோனா வைரஸ் தாக்கத் தொடங்கி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து நடிகை ஹிலாரி ஹீத் பலியானார். அவரைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்து காமெடி நடிகர் டிம் புரூக்கும் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளார்.

79 வயதான டிம் புரூக் நல்ல ஆரோக்கியத்துடனேயே இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு சளி, இருமலுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படுத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

கிம் புரூக் இங்கிலாந்தின் புகழ்பெற்ற காமெடி நடிகர், நாடகத்தில் நடித்து புகழ்பெற்று சினிமாவுக்கு வந்தவர்.

ஹவ் டூ இரிட்டேட் பீப்பிள், தி ஸ்வாட்ச், தி தர்ட்டீன் செயர்ஸ், ஒன் பேண்ட் மேன் போன்றவை அவர் நடித்த புகழ்பெற்ற நகைச்சுவை திரைப்படங்கள். டிம் புரூக்கின் மரணத்திற்கு இங்கிலாந்து நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.