ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம்

8
ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம்

இயக்குனர் இமயம் பாரதிராஜா படங்களில் பிரித்து பார்க்க முடியாத கலைஞர் ஒளிப்பதிவாளர் கண்ணன்.

கோலிவுட்டில் மூத்த கலைஞர்களுள் ஒருவரான இவர் பாரதிராஜா இயக்கிய 40க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அத்துடன், மொத்தம் 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

‘அலைகள் ஓய்வதில்லை’ முதல் பொம்மலாட்டம் வரை என பாரதிராஜா இயக்கிய படங்களுக்கு தன் ஒளிப்பதிவால் மெருகூட்டியவர் கண்ணன்.

பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான இவரை பாரதிராஜாவின் கண்கள் என்றும் அழைப்பர்.

பாரதிராஜா தெரிவிக்கையில் “நான் படப்பிடிப்புக்குச் செல்லும்போது கேமராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனுடைய இரண்டு கண்களை மட்டும்தான் எடுத்துச் செல்வேன்.” எனக் கூறியிருக்கிறார்.

இதய நோயால் அவதிப்பட்டு வந்த கண்ணன். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பலனின்றி காலமானார் கண்ணன். அவருக்கு வயது 69.

பிரபல இயக்குநர் பீம்சிங்கின் மகனான இவர், எடிட்டர் லெனினின் இளைய சகோதரர் ஆவார்.