இயக்குநரிடம் சிவகார்த்திகேயன் என்ன கேட்டார் தெரியுமா!

291

நயன்தாரா நடிப்பில் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கி முடித்துள்ள ”Mr.லோக்கல்” திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளிவரவுள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது தொடங்கிவிட்ட நிலையில் இந்த படம் குறித்து எம்.ராஜேஷ் பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறுகையில், “Mr.லோக்கல்’ படத்தின் கதையை சிவகார்த்திகேயனிடம் சொன்னதும், அவர் கேட்ட முதல் கேள்வி இந்த படத்தின் நாயகி யார்? என்பதுதான். ஏனெனில் அந்த கேரக்டர் அந்த அளவுக்கு போல்டானது.

”அதன்பின்னர் அவரே இந்த கேரக்டருக்கு நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என்று கூறினார். என்னுடைய எண்ணமும் அதாகவே இருந்தது.

“சிவா மனசுல சக்தி’ படத்தை மாஸா செய்தா எப்படி இருக்குமோ அந்த படம் தான் ”Mr.லோக்கல்’. அதனால் இந்த படத்தை ‘எஸ்.எம்.எஸ் 2.0’ன்னு கூட சொல்லலாம்“ என்று ராஜேஷ் கூறியுள்ளார்.

மேலும், தம்பி ராமையா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாகவும், அவர் நயன்தாராவுடன் படம் முழுவதும் வருவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் ரஜேஷ், குறிப்பிட்டார்.

யோகிபாபு, சதீஷ், ரோபோசங்கர் என இந்த படத்தில் ஒரு காமெடி கூட்டமே இருப்பதாகவும், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அம்மா கேரக்டரில் ராதிகா நடித்திருப்பதாகவும், அனைத்து காட்சிகளையும் அவர் ஒரே டேக்கில் ஓகே செய்துவிடுவார் என்றும் எம்.ராஜேஷ் கூறினார்.